Posts

Showing posts with the label அறிவியல் உண்மைகள்

தொடர்ச்சி -ஐந்து

Image
விடுபட்டுப் போன நீர்க்கரடி ( Tardigrade) பற்றி மீண்டும் சில வார்த்தைகளுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம் . நீர்க்கரடி , வேற்றுக்கிரக உயிரினமா , இல்லையா என்று கேட்டால் , அதற்குப் பதில் தெரியவில்லையென்றே சொல்ல வேண்டும் . ஆனால் , அந்த உயிரினத்தின் வாழ்வாதார நிலைமைகளில் சில , பூமியில் உள்ள ஒரு உயிரினங்களின் வாழும் முறைக்கு ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது . பூமியில் பலவிதமான சூழல்களில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன . கடல்நீர் , நன்னீர் , நிலம் , சேற்றுப்பகுதி , காடு , மலை , பனிப்பிரதேசம் , பாலைவனம் , வெப்பவலயம் எனப் பலவிதமான சூழல்கள் பூமியில் உண்டு . பூமியில் உயிரினம் தோன்றியதிலிருந்து , பூமியில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப படிப்படியாக அவை பரிணாம வளர்ச்சியடைந்து , மனிதன் என்னும் அறிவியல் உயிரினம் வரை வந்திருக்கின்றன . பரிணாம வளர்ச்சி ( இலங்கையில் பரிணாம வளர்ச்சியைக் கூர்ப்பு என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் Evolution) என்பது பற்றி ஒரு தெளிவான கோட்பாடு அறிவியலில் உள்ளது . இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தையாக சார்லஸ் டார்வின் ( Charles Darwin) என்பவர் வர்ணிக்கப்படுகிறார் . இங்கிலாந...

தொடர்ச்சி --நான்கு

Image
'Crop Circles' என்று சொல்லப்படும் பயிர்வட்டங்களில் , மனிதர்களால் செய்யப்பட்டவை போக மிகுதியாக எஞ்சி இருப்பவற்றை , மனிதனால் செய்யப்படாதவை என்று சொல்வதுதான் நிதர்சனமானது . இயற்கை தவிர்ந்து , உலகத்தில் உள்ள எதுவானாலும் , மனிதனால் உருவாக்கப்படாமல் , வேறு ஒரு மாற்று சக்தியினால் உருவாக்கப்பட்டன என்று சொன்னால் , அது மிகச் சாதாரணமான ஒரு விசயமல்ல . அந்த மாற்றுச் சக்தி , அமானுஷ்யமானதாக இருப்பதால் , நிச்சயம் அது வியப்பானதும் , விந்தையானதும் , நம்பவே முடியாததுமான ஒன்றாகத்தான் இருக்கும் . பயிர்வட்டங்களிலும் , நூற்றுக்கணக்கானவை அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக முடிவெடுத்துள்ளார்கள் . அதிகம் ஏன் , பத்தாயிரம் பயிர்வட்டங்களில் ஒரேயொரு பயிர்வட்டமாவது மனிதனால் செய்யப்படாமல் , அமானுஷ்ய சக்தியால் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டாலே , அப்படியொரு சக்தி உலகத்தில் உண்டு என்பது உறுதியாகிவிடும் . இதற்குக் காரணமாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியை வேற்றுக்கிரகவாசிகள் ( Aliens) என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் . இதுவே நமது...