Posts

Showing posts with the label உண்மை சம்பவங்கள்

நாஸ்ட்ரடாமஸ்

Image
நாஸ்ட்ரடாமஸ்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.  இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது நாஸ்ட்ரடமஸ் நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழு...

அமானுஷ்யப் பூனை

Image
மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’ அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்...

இப்படியும் சில மனிதர்கள்

ஸவீரா பூனாவாலா என்பவர் பூனேவை சேர்ந்த தொழிலதிபர்.அவரிடம் கங்கா தத் என்னும் கார் டிரைவர் லிமோஸின்[அதிக இடவசதிகொண்ட சொகுசான கார்] விலை உயர்ந்த காரை 30 ஆண்டுகளாக ஓட்டி வந்தார். ஒருமுறை பூனாவாலா மும்பை போயிருந்தபோது அவர் கார் டிரைவர் இறந்துவிட்டார்.இதை கேள்விப்பட்ட பூனாவாலா, நான் வந்த பிறகு தான் அவரது இறுதி ஊர்வலம் நடத்தவேண்டும் என்று போன் மூலம் கங்கா தத்தின் குடும்பத்தார்க்கு தெரிவித்தார். பிறகு தன்னுடைய மீட்டிங்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டு விமானம் மூலம் மும்பையிலிருந்து பூனா வந்தார். பூனா வந்தவுடன் தன்னுடைய லிமோஸின் காரை பூக்களால் அலங்காராம் செய்து கங்கா தத்தின் வீட்டிற்கு எடுத்து சென்றார்.அவரது உறவினர்களிடம் பேசி தன்னுடைய காரில் தான் இறுதி ஊர்வலம் எடுத்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அவர்களும் சம்மதிக்கவே தன்னுடைய விலை உயர்ந்த காரில் தன்னுடைய டிரைவரின் இறுதி ஊர்வலமும் நடந்தது.பூனாவாலா தான் அந்த காரை ஓட்டினார் . இதைப்பற்றி பூனாவலாவிடம் கேட்ட போது ”பணம் எல்லாரும் தான் சம்பாதிக்கிறோம்,அது மட்டுமே வாழ்க்கை இல்லை.நாம் சம்பாதிப்பதற்க...

துருக்கியில் நடந்த உண்மைச்சமபவம் இது.

வாசித்துப்பாருங்கள் கண்கள் கலங்குகின்றன! உண்மையான சகோதர பாசம் என்பது இதுதான்!! இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது. மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி “உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?” என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பி...