Posts

Showing posts with the label சிறுகதைகள்

நான்கு மனைவிகள்.

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்ற...

நம்பிக்கை.

எகிப்திய பாலைவனத்தின் நடுவே ஞானி ஒருவர் வசித்து வந்தார். பாலைவனச் சோலை என்பார்களே, அப்படிப்பட்ட பகுதி அது. அந்த இடத்தில் மட்டும் நீரும், மரங்களும் நிறைந்து இருக்கும். ஆனால் சுற்றிலும் பல நூறு மைல் தூரங்களுக்கு வெறும் பாலைவனம் மட்டுமே தென்படும். ஞானியைக் காண எங்கிருந்தோவெல்லாம் பலரும் பல நாட்கள் பயணம் செய்து அங்கு வந்து சேருவார்கள். அவரும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து அனுப்புவார். ஒருமுறை அயலூரான் ஒருவன் ஞானியைக் காண வந்திருந்தான். நெடுந்த்தொலைவில் இருந்து வந்த அவன் பல நாட்கள் ஒட்டகத்தில் பயணம் செய்து அங்கு வந்து சேர்ந்திருந்தான். ஞானி அப்போது சிறிய கூடாரமொன்றில் தங்கி இருந்தார். அதன் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தான் அவன். தங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளேன் என்றான் அவன். “எப்படி வந்தாய்?” அவரைப் பார்த்து ஞானி கேட்டார். “ஒட்டகத்தின் மூலம்” என்றான் அவன். “ஒட்டகம் எங்கே?” ஞானி கேட்டார். “வெளியில் நிறுத்தி உள்ளேன்” என்றான் அவன். “அதனைக் கட்டிபோட்டு வைத்தாயா? கேட்டார் ஞானி. “இல்லை என்ற அவன் மேலும், ‘எனக்கு இறைவன்...

தலைக்கனம் ஆகாது

ஒரு துறவி பல சித்திகளைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்துவார். மக்களும், சக துறவிகளும் அவரைப் பாராட்டுவார்கள். இதனால், அவருக்கு தலைக்கனம் அதிகரித்தது. துறவியின் தலைக்கனம் அவர் முக்தி அடைவதற்கு தடையாக இருந்தது. ஒரு நல்ல துறவி முக்தியடைய ஆணவம் தடையாக இருக்கிறதே என்பதை அறிந்த கடவுள், ஒரு முனிவரின் வடிவத்தில் துறவி முன் வந்தார். முனிவர் துறவியிடம்,""அன்பரே! தாங்கள் சித்திகளைப் பெற்று அதிசயங்கள் நிகழ்த்தி வருவதாக அறிந்து மகிழ்ந்தேன். தங்கள் அதிசய செயல்கள் சிலவற்றைக் காணலாம் என நினைக்கிறேன்,'' என்றார். துறவியும் பெருமையுடன் சம்மதிக்கவே, ""அதோ! அந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார். துறவி, ஒரு சிறிது மணலை எடுத்து யானை மீது எறிந்தார். யானை இறந்து விட்டது. ""ஆஹா'' என பாராட்டிய முனிவர், ""அந்தயானையை பிழைக்க வைக்க முடியுமா?'' என்றார். துறவியும் தன் கலசநீரை அதன் மீது வீசி எறிய யானை எழுந்து சென்றது. ""சரி...துறவியே! யானையைக் கொன்றீர்கள், பிழைக்க வைத்தீர்கள். .இதனால் உ...

பீமனின் கர்வம்!

பாண்டவர்கள் ஐவரில் தான் தான் பலசாலி என்ற எண்ணம் பீமனுக்கு மேலோங்கியது. தன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை! தன்னால் முடியாதது எதுவும் இந்த பூமியில் இல்லை என்று மிகவும் ஆணவம் கொண்டான் அவன்.மற்ற சகோதரர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் இளையவனாக பிறந்ததால் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளதே என்று வருத்தப்பட்டுக் கொள்வான்.தன்னுடைய உடல் பலத்தில் அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தான் பீமன். ஒருநாள் அவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான்.தான் பலசாலி என்று நிரூபிக்கும் வண்ணம் எதிர்பட்ட செடி கொடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்து கொண்டே வந்தான். அப்போது அவனது கால் இடறியது. தடுக்கியது வேர் என்று மகா பலசாலியான என்னையே தடுக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அந்த வேரை பிடுங்க முற்பட்டான். பலமாக முயன்றும் அவனால் முடியவில்லை! வேர்த்து வழிய நின்றவன். இது ஏதோ சூழ்ச்சியாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான் இது கண்டிப்பாக வேர் இல்லை! வேறு ஏதோ என்று வேரின் மூலத்தை தேடினான். தொலைவில் ஒரு குரங்கு ஒன்று அமர்ந்து கொண்டிருந்ததை கண்டான். அந்த குரங்கின் வால்தான் பீமனை தடுத்தது. பீமன் ஆணவ...

எப்படி எப்படி

ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார். ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார். வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான். அவரும் குதிரையை நிறுத்தினார். ""ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று வேண்டினான். இரக்கப்பட்ட அவர், ""குதிரையில் ஏறிக் கொள்,'' என்றார். அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான். இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது. ""உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,'' என்றார் அரசர். ""இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு,''...

அன்புப் பாலம்

ஜோதி! இங்க வாம்மா! சமையல் அப்பறம் செய்யலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்." அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி, நைட்டிக்கு மாறியவள், தயாராக வைத்திருந்த காஃபியைக் குடித்தாள். இரவு சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் சென்றவளை கமலியின் குரல் தடுத்தது. "இதோ வரேம்மா! என்ன விஷயம்?" அருகில் வந்து அமர்ந்தாள் ஜோதி. "என்னங்க...நீங்கதான் சொல்லுங்களேன்!" "என்னப்பா...அம்மா என்ன சொல்றாங்க?" "அது.... ஒரு கல்யாண விஷயம். நீயே சொல்லேன் கமலி!" கல்யாணம் பற்றிப் பேசினாலே பிடி கொடுத்துப் பேசாமல் நழுவி விடுவாள் ஜோதி! அதனால் தயங்கிய வெங்கடாசலம், கமலியைக் கைகாட்டி விட்டார். "கல்யாணமா? யாருக்கு? எங்க?" "அம்மா ஜோதி! இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி தனியா வாழ முடியும்? சேகர் போய் விளையாட்டுப் போல இரண்டு வருஷம் ஆயாச்சு. நாங்க இன்னும் எவ்வளவு நாள் சாஸ்வதம்? உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க நானும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கோம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைப் பார்க்க அந்தப் பையன் வருவான். இந்த நைட்டியை மாற்றி ஒரு நல...

உப்புக்கு வந்த சோதனை

ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார். சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான். இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ... நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் கு...

அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்புக ----நகைச்சுவை சிறுகதை1

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர். கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவர், பொறியியலாளர் இவர்களது சேவையைப் பற்றிக் கூறினார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட...