ஓநாய்கள்
சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை , அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ஆனால் , அவள் எந்த இரவும் ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டதில்லை. வளர்ந்து பெரியவளாகி அவளுக்கு கல்யாணம் நடந்து முடிந்த பிறகு கனவுகள் நின்றுவிட்டன. ஒருமுறை தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனை உற்றுப்பார்த்தாள். “ என்ன பார்க்கறே சுலோசனா ?” “ உங்களை நான் கல்யாணத்துக்கு முந்தியே எங்கயோ பாத்திருக்கேன்.எங்க பாத்திருக்கேன் ?” “ கல்யாணத்துக்கு முன்னாடி நாம சந்திச்சதே இல்லையே ” “ எனக்கென்னவோ கனவிலேயோ எங்கயோ உங்களைப் பார்த்தா மாதிரி இருக்கு. ” “ என்ன கனா சொல்லு ?” “ ஓநாய்களா வந்து துரத்தும். திடீர்னு முழிச்சிண்டுடுவேன் …” “ என்னை அப்டின்னா ஓநாய்ங்கறயா ?” “ இல்லை இல்லை நீங்க ஓநாய் கூட்டத்தில் இல்லை. நான் சொல்ல வந்தது என்னன்னா ” “ சரித்தான் வந்து படுடி! ” ‘ இன்னிக்கு வேணாமே …” “ ...