நம்பிக்கை.

எகிப்திய பாலைவனத்தின் நடுவே ஞானி ஒருவர் வசித்து வந்தார். பாலைவனச் சோலை என்பார்களே, அப்படிப்பட்ட பகுதி அது. அந்த இடத்தில் மட்டும் நீரும், மரங்களும் நிறைந்து இருக்கும். ஆனால் சுற்றிலும் பல நூறு மைல் தூரங்களுக்கு வெறும் பாலைவனம் மட்டுமே தென்படும்.

ஞானியைக் காண எங்கிருந்தோவெல்லாம் பலரும் பல நாட்கள் பயணம் செய்து அங்கு வந்து சேருவார்கள். அவரும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து அனுப்புவார்.

ஒருமுறை அயலூரான் ஒருவன் ஞானியைக் காண வந்திருந்தான். நெடுந்த்தொலைவில் இருந்து வந்த அவன் பல நாட்கள் ஒட்டகத்தில் பயணம் செய்து அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

ஞானி அப்போது சிறிய கூடாரமொன்றில் தங்கி இருந்தார். அதன் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தான் அவன்.

தங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளேன் என்றான் அவன்.

“எப்படி வந்தாய்?” அவரைப் பார்த்து ஞானி கேட்டார்.

“ஒட்டகத்தின் மூலம்” என்றான் அவன்.

“ஒட்டகம் எங்கே?” ஞானி கேட்டார்.

“வெளியில் நிறுத்தி உள்ளேன்” என்றான் அவன்.

“அதனைக் கட்டிபோட்டு வைத்தாயா? கேட்டார் ஞானி.

“இல்லை என்ற அவன் மேலும், ‘எனக்கு இறைவன் மீது முழு நம்பிக்கை உண்டு. அவர் பார்த்துக்கொள்வர்’ என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு, “முட்டாளே!” என்று சீறினார் ஞானி. “போ. போய் உடனே ஒட்டகத்தைக் கட்டிப் போடு. கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு. உன் ஒட்டகத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்க அவருக்கு நேரம் கிடையாது.”

நம்மால் முடிந்த செயல்களை நாமேதான் செய்யவேண்டும் என்ற நோக்கில் கூறப்பட்டக் கதை இது. நமது சோம்பேறி தனத்திருக்கு கவசமாக இறை நம்பிக்கையைக் காட்டக் கூடாது.

இக்கதைதான் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற பொன்மொழியாக மாறியது :

“அல்லாவிடம் பூரண நம்பிக்கை வையுங்கள். ஆனால், ஒட்டகத்தைக் கட்டிப்போட மறந்துவிடாதீர்கள்”

என்பதுதான் அந்தப் பழமொழி.

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers