அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்புக ----நகைச்சுவை சிறுகதை1
நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக
வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில்
ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும்
பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர்
அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி,
மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார்.
நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.
கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக்
கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில்
பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி
மருத்துவர், பொறியியலாளர் இவர்களது சேவையைப் பற்றிக் கூறினார். அப்போது
கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி
அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார்.
அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழக்குத் தொடர்வேன் என்றார்.
நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.
Comments
Post a Comment