இப்படியும் சில மனிதர்கள்
ஸவீரா
பூனாவாலா என்பவர் பூனேவை சேர்ந்த தொழிலதிபர்.அவரிடம் கங்கா தத் என்னும்
கார் டிரைவர் லிமோஸின்[அதிக இடவசதிகொண்ட சொகுசான கார்] விலை உயர்ந்த காரை
30 ஆண்டுகளாக ஓட்டி வந்தார்.
ஒருமுறை
பூனாவாலா மும்பை போயிருந்தபோது அவர் கார் டிரைவர் இறந்துவிட்டார்.இதை
கேள்விப்பட்ட பூனாவாலா, நான் வந்த பிறகு தான் அவரது இறுதி ஊர்வலம்
நடத்தவேண்டும் என்று போன் மூலம் கங்கா தத்தின் குடும்பத்தார்க்கு
தெரிவித்தார்.
பிறகு தன்னுடைய மீட்டிங்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டு விமானம் மூலம் மும்பையிலிருந்து பூனா வந்தார்.
பூனா வந்தவுடன் தன்னுடைய லிமோஸின் காரை பூக்களால் அலங்காராம் செய்து கங்கா
தத்தின் வீட்டிற்கு எடுத்து சென்றார்.அவரது உறவினர்களிடம் பேசி தன்னுடைய
காரில் தான் இறுதி ஊர்வலம் எடுத்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள்
வைத்தார்.
அவர்களும் சம்மதிக்கவே தன்னுடைய விலை உயர்ந்த காரில் தன்னுடைய டிரைவரின்
இறுதி ஊர்வலமும் நடந்தது.பூனாவாலா தான் அந்த காரை ஓட்டினார் .
இதைப்பற்றி பூனாவலாவிடம் கேட்ட போது ”பணம் எல்லாரும் தான்
சம்பாதிக்கிறோம்,அது மட்டுமே வாழ்க்கை இல்லை.நாம் சம்பாதிப்பதற்கு
உறுதுணையாக இருந்தவர்களை நாம் மதிக்க வேண்டும் ” என்று கூறினார்.
Comments
Post a Comment