பகுதி மூன்று

ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். 
இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா.
என்ன சொல்றே? 
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது.  காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?
அவசரப்படாதே.  கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.  ஒருத்தனும் சரியாய் வரலை.  கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா,  சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா. 
எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.  
கணவர் கப் சிப் ............. ஆகிறார்.  இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள்.  அவள் பின்னாடியே ஒரு இளைஞன். 
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர் 
அவர் ...ன்னா 
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே.  அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.
அப்படியா வாப்பா..உட்கார். 
உட்கார்ந்தான்.  
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க.  அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.
இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.  
அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே.
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.
சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது.  அப்பறம் என்ன செய்வே. 
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார். 
சரி போயிட்டு வா ....  அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான். 
அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?
அப்பா சொன்னார்.  இவனிடம் பணமும் இல்லை.  வேலையும் இல்லை.  ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான். 
இளைஞர்களே ..  இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்.  முதலில் காலை ஊன்றுங்கள்.   அதன் பிறகு காதல் என்ற விதையை ஊன்றுங்கள்.  அது தான் உங்களுக்கு பெருமை. 

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers