மச்ச வீர மாமன்னன்
சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும் தீவு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் திறனும் தீரமும், வரனும் வீரமும், அரணும் அறிவும், நரனும் நெறியும் படைத்த நற்றமிழ்த் தீவு.
இந்தத் தீவினால் சேர, சோழ, பாண்டியர்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள். காரணம் – அந்தத் தீவிலிருந்து எப்போதும் குளிர் காற்று வீசும்! “திண்ட மண்டலத் தொண்டைத் தீவு’ என கவிஞர்கள் பண்ணிசைத்து பாடிய தீவு! கி.பி. மு.பி. 10,878 ஆண்டின் கல்வெட்டுகளிலே இத்தீவின் வரலாறு செதுக்கப்பட் டிருப்பது சரித்திரப் பேராசிரி யர்கள் அறியாத உண்மை.
98 போர்க் களங்கள் கண்ட தொண்டைக் கட்டு விலாமுட்டு வீரசிங்க பலரேயத்தானாதி சூரத் தேவன் என்ற தமிழ் அரசனின் கீழ் இந்த திண்ட மண்டலத் தொண்டைத் தீவு உலகமெங்கும் புகழெய்தி, கவிஞர்கள் வாயிலெல் லாம் புகுந்து புறப்பட்டு, வந் தாரை வாழ வைத்து, வராதவரை வழியனுப்பி, இருந்தாரை இருக்க வைத்து சரித்திரம்காணா புகழ் பெற்று, தமிழ்நாட்டு வரலாற்றிலே அழியாத இடம் பெற்று விளங்கி யது. பொன்னேடுகளில் மாணிக்க எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சரித்திரம் அது. மரகத அட்டையினால் பைண்டும் செய்ய வேண்டும்!
அந்த மன்னாதி மன்னன் சூரத்தேவனின் ஒரே மகன் வில் லாதி விங்கட சங்கட கோழைச் சூரன் காலத்தில் திண்ட மண்டல தொண்டைத் தீவின் மக்கள் விடுதலைக்காகப் போராட ஆரம் பித்தனர். இதையெல்லாம் பார்த் துக் கொதித்து எழுந்தான் குண வீர குண்டுகுட்டி காடு வெட்டி புறமுதுகுராயனின் மகன் குணவீர குண்டுகுட்டி மேடுமுட்டி பின்வாங்குராயன்!
இந்த நிலையில்தான் அவன் ஒரு நாள் ஒரு கன்னியைச் சந்தித் தான்.! கன்னியா அவள்? பேரழகி! எழிலரசி! அமாவாசை நிலா! பௌர்ணமிச் சூரியன்! வசந்த கால சூறாவளி! கோடையிடி! கொடி இடையாள்! பருவத்தின் பரிசு! உருவத்தில் ஒடிசு! புருவத் தில் புதிசு! வானத்து வெண்ணி லவு! கானத்து கர்த்தபம்! கண் ணோடு கண்ணோக்கின் வாய் சொற்கிடமேது? அவன் உடனே பேசினான்… “கண்ணே!”
அவள் பவள வாய் திறந்து, “அத்தான்” என்றாள்.
“கனிரசமே!” என்றான்.
“இன்று நான் சாப்பிட்டது மிளகு ரசம்” என்றாள்.
ஊரடங்கும் நேரத்திலே ஆர ணங்கு “அத்தான்’ என்று அழைத் தால், காளையவன் ஓலையா எழுதுவான்? சோலை இருக்கை யில் ஓலை எதற்கு? இரவு இருக் கையில் துறவு எதற்கு?
அவன் கையிலே ஒரு தவளை முத்திரை பொறித்த மோதிரத்தைக் கொடுத்தாள் அவள். “இந்த இலச் சினையைக் காட்டினால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போக லாம் அத்தான்” என்றாள்.
அதைப் பெற்று, சுரங்க வாயி லின் வழியே புகுந்து, அரண்மனை உள்ளே சென்று, நாட்டுக்கு விடு தலை அளித்தான் பின்வாங்கு ராயன்.
மனம் திருந்திய மன்னன் தொண்டைக்கட்டு விலாமுட்டு வில்லாதி விங்கட சங்கட கோழை சூரத்தேவன், குணவீர குண்டு குட்டி மேடுமுட்டி பின்வாங்குராய னைக் கட்டித் தழுவினான். அணைத்த மன்னனின் கையிலே பின்வாங்குராயன் முதுகில் இருந்த ஏதோ ஒன்று தட்டுப் பட்டது. பார்த்தான் மன்னன்! “ஹா, மச்சம்! அதே மச்சம்!” என்று கூவிய மன்னனைப் பார்த்து மக்களும் மற்றவரும் திகைத்து நிற்க, மன்னன் பேச லுற்றான்.. “மக்களே! இந்த வீரன் முதுகில் இருக்கும் இந்த மச்சம் அவன்தான் இந்த அரசுக்கு உரி யவன் என்பதைக் காட்டி விட்டது!”
“அது எப்படி?” என்றொரு குரல் எழுந்தது.
“அது அப்படித்தான்! மச்சத் தின் மகிமை அது! இவனுக்கே மகுடம்! என் மச்சானுக்குக் கொடுக்க வேண்டும் என்றிருந்த இந்த மகுடத்தை இந்த மச்சனுக் குக் கொடுக்கிறேன்” என்று பிரகடனம் செய்தான் மன்னன்.
“மச்ச வீர மாமன்னன் வாழ்க!” என்று மக்கள் குரல் வானைப் பிளந்தது.
Comments
Post a Comment