ஓர் உத்தம தினம்----II
பல் தேய்த்து
முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக்
குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே
தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று
தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.
நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர்
சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும்
சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.
சத்தீசுக்குக்
காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.
”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த
நாள் இல்லையா?”
”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”
”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம்.
அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”
”கோயிலுக்குப் போயாகணும்.”
”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”
”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம்.
ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”
”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே
முடிச்சிரணும்.”
”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”
”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங்
ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”
புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து
பிள்ளையாருக்கு முன் வரிசையாகத்
தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.
”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”
”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று
திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.
பிளாட்ஃபாரத்தில்
நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.
”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண
விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”
”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ
ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”
மாருதியில்
ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.
”தெரியும், சொல்ல வேண்டாம்.”
”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா
வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”
”சே, புத்தி போறதே!”
ஜெயநகரில் மணிப்
பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை
மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”
அப்பாவைத் தாரிணியின்
குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
கஸ்தூரியைப்
பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” என்றார்.
தேங்க்யூ
கர்னல்.”
”இங்கிலீஷ்
தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர்
போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான்.
டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி
யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”
”தவறாம! தினம்
பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.
”தட்ஸ் மை
கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி
திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி
வந்ததுன்னு தெரியுமா?”
”கர்னல் இதை
என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.
கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன்
கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.
”சேச்சே, லஞ்ச்
சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”
”தேர் கோஸ் மை
எம்.டி.ஆர்.”
”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா
வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.
அம்மா தனியாகக்
கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.
”ஆமாம்மா.”
”எல்லாம்
போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப்
புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”
அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?”
என்றார்.
”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு
வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”
”எங்காத்திலெல்லாம்
வந்து படுத்துப்பியா,
ரிச் கேர்ள்.”
”அப்படி
இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை.
தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.
ரேஸ் கோர்ஸ்
வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட்
வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக
டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப்
பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.
சத்தீஷ்
திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து.
சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?”
என்றான்.
”எங்கேயாவது!”
”சரி லெட்ஸ் கோ
டு ‘எங்கேயாவது’….”
ஸோஃபியா
கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம்
உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன்.
மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி.
கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல்
தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த
சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக
இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.
ஏன் இந்தத்
திகட்டும் சந்தோஷம்?
விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி
போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி
வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.
மிக அழகான ஒரு
வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான்.
ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக்
கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை
அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.
”பிங்க்கு
பேட்டே இதர் ஆவோ.”
‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில்
கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத்
Comments
Post a Comment