ஓர் உத்தம தினம்----I
ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.
களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று
கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில்
சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.
சத்தீஷ் திருப்திப்பட்ட
நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத்
துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து
சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி
நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.
என் கனவில்
புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!
”எழுந்திருங்க”
என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப்
பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.
”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா.
எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”
”ஒரு தேங்க்ஸ்
முத்தம்கூடக் கிடையாதா?”
”கிடையாது.”
டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில்
இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்”
என்று கொடுத்தான்.
”என்ன
எழுந்துட்டியா,
ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.
”தேங்க்ஸ்
மஞ்சு.”
”உனக்கு என்ன
வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத்
தள்ளிப் போடாதே.”
மஞ்சு, இன்னிக்குக் காலையில என்
வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே
ஆகணும். எப்ப வரே?”
”எப்ப
வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன
பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”
”அவருக்கென்ன…
வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”
சத்தீஷ்
படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.
”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே
போகப் பிளான் வெச்சிருக்கார்.”
”ஆல் தி பெஸ்ட்
தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு
சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி
ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”
டெலிபோனை
வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.
”மஞ்சுதானே!
ஒழிஞ்சுதா?”
சே! இன்னிக்கு
யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”
அவளைப் பிடித்து
இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.
”கையெடுங்க. சொல்றேன்.”
”எடுத்தாச்சு.”
”அந்தக் கை.”
”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”
”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”
”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து
அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.
”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து
அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”
”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை
நானு! வி ஹேடு செக்ஸ்.”
”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு
உடைக்கிற ஆசாமி கிடையாது.”
இடுப்பின்
உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம்
கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.
பல் தேய்த்து முகத்தில்
தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக்
குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே
தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று
தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.
நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர்
சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும்
சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.
சத்தீசுக்குக்
காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.
”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த
நாள் இல்லையா?”
”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”
”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம்.
அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”
”கோயிலுக்குப் போயாகணும்.”
”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”
”முதல்ல கோயில். அப்புறம்தான்
பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே
ஆகணும்.”
”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே
முடிச்சிரணும்.”
”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”
”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங்
ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”
புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து
பிள்ளையாருக்கு முன் வரிசையாகத்
தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.
”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”
”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று
திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.
பிளாட்ஃபாரத்தில்
நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.
”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண
விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”
”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ
ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”
மாருதியில்
ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.
”தெரியும், சொல்ல வேண்டாம்.”
”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா
வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”
”சே, புத்தி போறதே!”
ஜெயநகரில் மணிப்
பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை
மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”
அப்பாவைத்
தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
கஸ்தூரியைப்
பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” என்றார்.
சே! இன்னிக்கு
யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”
அவளைப் பிடித்து
இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.
”கையெடுங்க. சொல்றேன்.”
”எடுத்தாச்சு.”
”அந்தக் கை.”
”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”
”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”
”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து
அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.
”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து
அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”
”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை
நானு! வி ஹேடு செக்ஸ்.”
”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு
உடைக்கிற ஆசாமி கிடையாது.”
இடுப்பின்
உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம்
கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.
பல் தேய்த்து முகத்தில் தண்ணீர்
தெளித்துக்கொள்ளும்போதும்
Comments
Post a Comment